விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் பட்டொளி வீசிப் பிரகாசிக்கிறது. க்ஷேச நதி, கருட நதி என்ற இரண்டு புண்ணிய நதிகள் பாயும் புண்ணிய பூமி இந்தப் பாதூர். அதிகாலையில் நடந்து சென்றால், கிளிகளின் இனிய நாதமும், காற்றில் அசைந்தாடும் நெற்கதிர்களின் கீதமும் மனதைப் பரவசப்படுத்தும்.
பாதூர் என்பது வடமொழிச் சொல்லாகும். சோழ மன்னனின் எல்லைக் காவல் படைகள், நக்கன் சாத்தன் என்ற தளபதியின் தலைமையில் பாதூரில் தங்கியிருந்ததாக மிகப் பழைமையான கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. அப்போது பத்து முக்கிய ஊர்கள் ஒருங்கிணைந்து நின்றதால், பத்தூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, காலக்கிரமத்தில் அதுவே மருவி பாதூர் என்று ஆகிவிட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

நேர்மை உயர்வு தரும்

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்

போகி நல்வாழ்த்துக்கள்