Posts

நேர்மை உயர்வு தரும்

Image
நேர்மை உயர்வு தரும்: மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.   அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும்...

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்

Image
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்  - கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்... "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள். "அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே!  தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே! உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்...

விவசாயிகளின் நிலை

Image
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'.'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?

வேளாண்மை

Image

கிராம சபை கூட்டம்

Image
கிராம சபை கூட்டம் ஜனவரி 26 பங்கேற்போம்! விவாதிப்போம்! தீர்மானிப்போம்!  கிராம சபையானது மக்களுக்கான அதிகாரம் ஆகும்.

போகி நல்வாழ்த்துக்கள்

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது . இந்த பண்டிகை பழையவற்றையும் , உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது ....

போகி நல்வாழ்த்துக்கள்

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது . இந்த பண்டிகை பழையவற்றையும் , உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது . போகியன்று வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் , தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதுபோகி பண்டிகையில் மறைந்துள்ள தத்துவமாகும் . மேலும் இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு . போகி என்றால் மகிழ்ச்சியானவன் போகங்களை அனுபவிப்பவன் என்று பொருள் . நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே போகி பண்டிகை எனப்படுகிறது.